துனிசியா நாட்டின் புதிய பிரதமராக நஜ்லா பவுடன் ரோம்தனே பொறுப்பேற்கவுள்ளார்.

வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா நாட்டிற்கு பெண் ஒருவர் பிரதமராகப் பதவி ஏற்கவுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அந்நாட்டு உயர் கல்வி அமைச்சின் பணிப்பாளரான இவர், ஏற்கனவே உலக வங்கியில் பணிபுரிந்தவர்.

கடந்த யூலை மாதம் அந்நாட்டு அதிபர் கயிஸ் சயித், முந்தைய அரசைக் கலைக்க உத்தரவிட்டதையடுத்து 2 மாதங்களாக நாடாளுமன்றம் முடங்கிப்போய் இருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் புதிய அரசை அமைப்பது தொடர்பாக நஜ்லாவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

நாட்டில் நிலவிவரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நஜ்லா 10 ஆவது பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார்.