பர்ஹானா பதுறுதீன்
இலங்கையின் விவசாயம் அண்மைக்காலமாக வரலாற்றில் முதல் முறையாக மிக மோசமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று விவசாயிகளின் இரத்தத்தில் மிகுந்த அழுத்தம் இருப்பதை உணர்கிறேன் என்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சில தினங்களில் என்னால் பொலன்னறுவைக்கு செல்லக்கூடியதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுதுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிமா பண்டாரநாயக்கவின் 21ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஸூம் தொழில்நுட்பத்தில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைவர் எந்தளவு தூய்மையானவராக, நேர்மையானவராக இருந்தாலும் அவர் சிறந்த தலைவராக மாறுவதற்கு நேர்மையான அமைச்சரவையும் இருக்க வேண்டும். சிறிமா பண்டாரநாயக்க சிறந்த தலைவராக மாறியதும் அவரை சுற்றிச் சிறந்த அணியொன்று இருந்த தனாலாகும் என சிறிசேன தெரிவித்தார்.
மதம், மொழி விடயங்களில் அரசியல் கட்சிகளுக்கிடையில் இருந்த கொள்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாறுபட்டது. எமது கட்சிக்குச் சிறந்த தூரநோக்கு, கொள்கை இருந்தது. பண்டாரநாயக்கவின் கொள்கையும் அதுவாகும்.
அதனால்தான் சிறிமா பண்டார நாயக்க தேசிய மற்றும் சர்வதேச தலைவராக முடிந்தது.அண்மைக்கால வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு உரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இணைந்திருங்கள்