2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது, பெருந்தோட்ட வீடமைப்பு அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
பெருந்தோட்டங்களிலுள்ள நெடுங்குடியிருப்புக்களை 3 வருடங்களில் இல்லாது செய்வதற்காக குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பெருந்தோட்ட வீடமைப்புக்களுக்காக அமைச்சுக்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனி வீட்டுத் திட்டம் போன்றன நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், முழுமையான அளவு குறித்த வீட்டுத் திட்டங்கள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை.
பகுதியளவில் கட்டப்பட்ட வீடுகள் பராமரிப்பின்றியும் மக்களிடம் கையளிக்கப்படாமலும் சேதமடைந்து வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்