அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட பல முற்போக்கு சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மாநாடு டிசம்பர் 20 ம் திகதி அன்று ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நிகழ்வு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த பிரதிநிதிகள் மாநாட்டின் தொனிப்பொருளானது,சீரழிந்த தாயகத்தைக் கட்டியெழுப்புகின்ற தீர்வு என்பதுடன், நாட்டின் எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்கு பொறுப்பேற்கத் தயாராக இருக்கும் தேசிய நிறைவேற்று சபையின் நியமனத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதாகும்.

மனிதநேயம், சமூக நீதி, சுற்றுச்சூழல் நட்பு, பொருளாதார நிலைத்தன்மை, இலங்கையின் நாகரிகம் மற்றும் கலாச்சாரம், பொதுப் பங்களிப்பு உகந்த வள பயன்பாடு மற்றும் பொருளாதார ஜனநாயகம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஜனநாயகம், பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக மற்றும் சமூக ரீதியாக சீரழிந்த இலங்கையின் மறுசீரமைப்புக்கான தொடர்மற்றும் இந்த மாநாட்டில் அரசியல் முன்மொழிவுகளும் வெளியிடப்படும்.

அரசின் கடனை செலுத்துதல், பொருளாதார வலுவூட்டல், மனித வள மேம்பாடு, உற்பத்தி நிறுவன கட்டமைப்புகள், மோசடி, ஊழல் மற்றும் கழிவு ஒழிப்பு, புதிய வளர்ச்சி திட்டங்கள், கலாச்சாரம், கலை மற்றும் பொழுதுபோக்கு, சமூக மேம்பாடு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் உட்பட அனைத்து துறைகளையும் உள்ளடக்கி செயற்படுத்த மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

நிலவும் கொவிட் தொற்றுநோய் சூழ்நிலையில், சுகாதார வழிகாட்டுதல்களின்படி இந்த பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்பட உள்ளது.