நாட்டின் பொருளாதாரம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
சீனாவிடம் இருந்து கடன்பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த போது, கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி திட்ட சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல், நிதியமைச்சர் இந்தியாவிற்கு சென்று கடன் கோரியுள்ள நிலையில், திருகோணமலை எண்ணெய் குதங்கள் தாரைவார்க்கப்படுகின்றன.
அரசாங்கத்தின் உண்மை நிலை தொடர்பான விபரங்களை வெளியிடுவோர் பதிவியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
இவ்வாறு முறையற்ற நிர்வாகத்தினால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இணைந்திருங்கள்