அரச ஊழியர்களுக்கு அரசு 5000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்கியுள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடிவேல் சுரேஷ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

தொழிலமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தோட்ட கம்பனிகளுடன் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய பணிப்புரைகள் வழங்க வேண்டியது அவசியம்.

நாட்டை நேசிக்கும் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தத் தவறியுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நாம் பாராளுமன்றத்திலும் வெளியிலும் விடயங்களை முன்வைத்து வரும்போதும் அரசாங்கத்தினால் அதற்கான கவனம் செலுத்தப்படவில்லை.

நாட்டில் தொழில் சட்டங்கள் நடைமுறையில் உள்ள போதும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த சட்டங்கள் மூலமான பிரதிபலன்கள் கிடைப்பதில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய போதும் பெருந் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதில்பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.” – என்றார்.