20ம் திருத்த சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 2023.02.05ம் திகதி நாடாளுமன்றை கலைக்கமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, எதிர்வரும் 2023.02.05ம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு அதிகளவான சாத்தியங்கள் உள்ளதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளுராட்சிமன்ற தேர்தல் ஓராண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2023 மார்ச் 20ம் திகதிக்குமுன் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் நடாத்தப்பட உள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரம் பொதுஜன முன்னணியிடம் இருக்கும் போதே தேர்தலை நடாத்த அரசு திட்டம் இட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்ப மாகாணசபை தேர்தலை நடாத்த திட்டம் இட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஒன்றன்பின் ஒன்றாக 3 தேர்தல்கள் அடுத்தடுத்து நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தலை இலக்கு வைத்து அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் 2024ம் ஆண்டிற்கு முன்னர் நடாத்தப்படாது எனவும் அரசாங்கத் தகவல்களை மேற்கோள்காட்டி குறித்த தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இணைந்திருங்கள்