சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குற்றவியல் மற்றும் போக்குவரத்து சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பதவிக்கு மேலதிகமாக அவர் இப்பதவிக்கு காவல்துறைமா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, இதற்கு முன்னர் பல தடவைகள் காவல்துறை ஊடகப் பேச்சாளராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.