”யுகதனவி“ அனல் மின்சார நிலைய உற்பத்தி தேசிய மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, 100 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய உற்பத்தியுடன் இணைக்கப்படுகிறது.

யுகதனவி மின்சார மையம்

யுகதனவி“ அனல் மின்சார நிலைய உற்பத்தி தேசிய மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, 100 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய உற்பத்தியுடன் இணைக்கப்படுகிறது.

இந்தநிலையில் மின்மாற்றி பழுது காரணமாக மின்சார விநியோகத்தில் தடங்கல் ஏற்படாது என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தபோதும் நேற்று இரவு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சார விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டன.

நுரைச்சோலை மின்சார மையம்

இதேவேளை எரிபொருள் விநியோகத்தின் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் மின்சார விநியோகத்துண்டிப்பு இருக்காது என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் அடுத்த ஒரு வாரத்துக்கு, இலங்கை மின்சார சபைக்கு தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பிலவை கோடிட்டு, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

டொலர் தட்டுப்பாடும் இந்திய உதவியும் 

இலஙகையில் டொலர் கையிருப்பில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் இறக்குமதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கை, இந்தியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து 500 மில்லியன் டொலர்கள் கடன் திட்டத்தி்ன்கீழ் வழங்கப்பட்டன.

இதனையடுத்து தற்போது எரிபொருள் இறக்குமதி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.