சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ளும் காலம் நிறைவடைந்துள்ளது என்றும் அரசாங்கம் இனியும் அதன் உதவியை நம்பியிருக்க முடியாது ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இவ்வாறு கூறினார்.
அதேநேரம் எரிபொருள் நெருக்கடியானது எரிசக்தி நெருக்கடியாக அதிகரித்து அதன் மூலம் நாட்டின் வங்கி முறைமையின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.
குறித்த நிதி நெருக்கடியை உள்நாட்டு செயற்பாட்டின் மூலமோ அல்லது வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வந்து ஹோட்டல் தங்குவதற்கு பணம் செலவழிப்பதன் மூலமோ தீர்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் விதிகளுக்கு பொதுமக்கள் உடன்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதாக அரசாங்கம் தெரிவித்த கருத்து தொடர்பாகவும் இதன்போது கேள்வியெழுப்பிட்டது.
இதற்கு பதிலளித்த ஹர்ஷ டி சில்வா, சர்வதேச நாணய நிதியம் எப்போதாவது அத்தகைய சட்டங்களை விதித்துள்ளது என்பதை நிரூபித்து காட்ட முடியுமா என்றும் அரசாங்கத்திற்கு அவர் சவால் விடுத்தார்.
இணைந்திருங்கள்