அமைச்சரவையில் சில மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையில் எஸ்.பி.திசாநாயக்க புதிய அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பவித்ரா வன்னியாராச்சி, தினேஷ் குணவர்தன மற்றும் காமினி லொக்குகே ஆகியோருக்கு புதிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.