பரந்தப்பட்ட கூட்டணி அமைத்தே அடுத்துவரும் தேர்தல்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிடும் – என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதுளை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு வேண்டும். இதற்கு அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

சிலர் இன்று ஜனாதிபதி வேட்பாளர் கனவில் உள்ளனர். அதற்கு இன்னும் காலம் உள்ளது. தேர்தல் வரும்போது அரசியல் செய்யலாம்.

பரந்தப்பட்ட கூட்டணி அமைத்தே நாம் தேர்தலை எதிர்கொள்வோம். பங்காளிக்கட்சிகளுடனான எமது பயணம் தொடரும். ” – என்றார் மைத்திரி.