நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியின் பெரும்பான்மை குறையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் அதை சமாளிக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரை   குறுகிய காலத்துக்கு ஒத்தி வைப்பது குறித்து அரசு அவதானம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் அரசின் முக்கிய வேலைத்திட்டங்கள் இல்லை எனத் தெரிவித்து புதுவருடத்தை முன்னிறுத்தி இவ்வாறு ஒத்திவைக்க முடியுமென அரச உயர் மட்டத்தில் உள்ள சிலர் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் ஆளும் அரசின் பெரும்பான்மையை இல்லாமல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் இதுதொடர்பாக கொழும்பில் உள்ள மூன்று இடங்களில் பேச்சு  நடத்தப்பட்டுள்ளன.

தங்களது பெரும்பான்மையை சபாநாயகருக்கு எழுத்து மூலம் காட்டி அரசுககு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைகொண்டுவருவதற்கு இந்த புரட்சிகர குழு எதிர்பார்த்திருப்பதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.