துஷ்யந்தன்.உ

இலங்கையில் தற்பொழுது உள்ளள பிரச்சனையாக தனிமனித வாழ்வு காணப்படுகின்றது எவ்வாறு வாழ்வது தொடர்பான மனம் தொடர்பான பிரச்சனைகளுக்குட்பட்டுள்ளனர். தற்போதய நிலையில் எவ்வாறு வாழ்க்கையினை கொண்டு செல்வது, தங்கள் குழந்தைகள் தொடர்பாக, தொழில் தொடர்பாக, உணவு தொடர்பாக, கடன்கள் தொடர்பாக பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு காணப்படுகின்றனர்.

பாரிய பொருளாதார பிரச்சனையிக்கு முகம் கொடுக்க வேண்டியதாக உள்ள நிலையில் தங்கள் எதிர்காலம் தொடர்பாக பல கவலைகளைக் கொண்டு காணப்படுகின்றனர். தமது கவலைகள் கோபங்களை மனவெளிச்சியினை வெளிக்காட்டுவதற்காக குணப்படுத்தல் பொறிமுறைகளாக ஆர்பாட்டங்கள் பேரணிகள் சமாதானமாக மேற்கொள்ளப்படுகின்றது.

தமது பிள்ளைகள் தொடர்பாகவும் எதிர்காலம் தொடர்பாகவும் கொண்டுள்ள பயம் பிரதிபலிக்கின்றது. கிடைக்கின்ற வருமானத்தில் எவ்வாறு வாழ்வது என்ற பிரச்சனையும், பதட்டம், மனவெளிச்சி போன்ற உளவியல் ரீதியான பல முரண்பாடுகளில் சிக்கி தவிக்கின்றனர்.

இவ்விடயங்களை நாம் பார்கின்ற போது மிகவும் கூடாத அல்லது மோசமான நிலையிக்கு கொண்டு செல்லும் என்பது உண்மையே இதுப்பினும். இதனை நாம் சாதகமாக முறையில் எம்மை மாற்றுவதற்கு பயன்படுத்த முடியும். இருப்பினும் எமது இலங்கை நாட்டில் இதுவரைகாலமும் நடைபெற்ற நிகழ்வுகளை பார்க்கையில் எமக்கு தெரிகின்றது இப்படியான நாட்டின் சூழலினை பாதகமாக விடயங்களுக்கு பயன்படுத்தி பெரும் அனர்த்தங்களை ஏற்படுத்திய நிகழ்வுகள் ஏராளம்.

இலங்கை வரலாற்றில் இப்படியாக மக்கள் ஒன்றினைந்து அனைவருக்கும் பொதுவான பிரச்சனைகள் தொடர்பாக வாதிட்ட அல்லது ஒற்றுமையாக செயற்பட்ட சந்தர்ப்பம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

ஆங்கிலேயரிடமிந்து சுகந்திரத்தினை பெற்ற காலத்தில் இருந்து அவர்களின் நெறிகளுக்கு அமைய பிளவுபட்டு நான் பெரிதா நீ பெரிதா போன்ற பிளவுகளிலே காணப்பட்டது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மக்கள் தங்கள் நெஞ்சுவலிக்கின்றது போன்ற வகையில் ஒருமித்தது காணப்படும் சந்தர்ப்பம் இதுவே ஆகும்.

பல்வேறுபட்ட அனர்த்தங்களுக்கு தனி தனியாக, சிங்களம் பேசும் மக்கள், தமிழ் பேசும் மக்கள், இனரீதியாக, மொழிரீதியாக, சமயம்ரீதியாக, சாதிரீதியாக, பிரதேசரீதியாக பிளவுபட்டு நடைபெற்ற அனர்த்தங்கள் ஏராளம் ஆனால் இன்று 2022 அனைவருக்கும் பொதுப்பிரச்சனையாக ஒன்று காணப்படுகின்றது. நாளை என்ன நடக்கும் பணத்தின் பெறுமதி தேய்வடைகின்றது எவ்வாறு வாழ்வோம் என்ற பயத்தில் அனைத்து மக்களும் உள்ளது.

இந்த இடத்தில் அனைத்து மக்களும் ஒன்றினைகின்றோம். இது வே இப்பிரச்சனையினை தீர்ப்பதற்கான அல்லது இலங்கையினை கட்டியொழுப்புவதற்கான வாய்பாகும். இதனை நாம் அவதானத்துடன் உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும்.

அடுத்த பரம்பரையினருக்கு சிறப்பான நாட்டை கொடுக்க வேண்டும். பிள்ளளையினை பெற்றெடுக்கும் தாயானவள் படும் வேதனை வலி போன்று நாம் இவ் பொருளாதார நெருக்கடியினை சரியாக நேராக பார்க்க வேண்டும். இவ் அரிய சந்தர்பத்தினை நாம் சரியான முறையில் பயன்படுத்தி இலங்கையினை கட்டியெழுப்பலாம். இவ் வேதனையான சந்தர்பத்தினை நாம் ஏற்றக்கொள்ள வேண்டும். இதற்கு தயார்படுத்தலினை செய்ய வேண்டும்.

நாம் சில வேளைகளில் தனிநபர் அல்லது சில குழுவினரை வெறுப்பவர்களாக மாறுகின்றோம். இது மனித இயல்பு இதுப்பினும் இதனை பக்குவத்துடன் அனுக வேண்டியது முக்கியமானது. ரஜபக் ஷ போனால் சரியாகுமா? அல்லது ‘கோட்டா கோ கோம்’ என்று கூறுவதால் முடியுமா பிரச்சனை இல்லை என்பதே பதில்,

நாங்கள் சில கற்பனைவாதமான வகையில் அரசியல்வாதிகளை நோக்குகின்றோம் அரசியல்வாதியானவர் பலமானவராக, பெரியவராக, பணம் நிறைந்தவராக, வாகனம் உடையவராக, சண்டியனாக அல்லது பலம் பொருந்திய நபராக இருத்தல் அவசியம் என நாம் மிகவும் எளிமையான கற்பனைவாத்தில் ஊறியிருக்கின்றோம் அதனை நாம் அகற்றி நாம் சிந்தனை செய்ய வேண்டும்.

மக்களாகிய நாம் உணரவில்லை தூரநோக்குடன் செயற்படக்கூடியவர்கள் தொடர்பாக அல்லது வேலையினை சரியாக ஊழல் அற்று மேற்கொள்பவர் தொடர்பாக; இதனாலே, நாம் ஹிட்லர் அல்லது மன்னர்கள் போல் செயற்படுபவர்களை விரும்புகின்றோம். சிந்தனையில் மாற்றம் தேவை என்பதே முக்கியமானது.

இவ் சிந்தனையில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும். கொடுரமான சொல்களால் மாற்றத்தினை ஏற்படுத்த முடியாது. அனைத்து சமயங்களும் வன்முறையோ, கொடுரங்ளையோ ஏற்றுக் கொள்ளவில்லை சமயங்கள் சமாதானம் மற்றும் நல்லெண்ணங்களையே கூறின. இதனை நாம் ஏற்றுக் கொண்டு எம்மை இலங்கையர் என்ற ஒரே குடையினுள் முன்னோக்கி செல்லலாம்.