நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்பட்ட பிறகு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவார் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இன்று அறிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கூறியவை வருமாறு
‘கோ ஹோம் கோட்டா’ – என்ற எனது நிலைப்பாட்டில் எள்ளளவேனும் மாற்றம் இல்லை.
சஜித் பிரேமதாச தூய்மையான அரசியல் தலைவர். அவரை குறைகூற விரும்பவில்லை. ஆனாலும் சவாலை ஏற்க அவர் முன்வரவில்லை.
கட்சிக்காகவே நான் அமைச்சு பதவியை ஏற்றேன். கட்சியுடனேயே தொடர்ந்தும் பயணிக்க எதிர்பார்க்கின்றேன். கட்சியை காட்டிக்கொடுக்கவில்லை.
சவாலை ஏற்று, மூன்று மாதங்கள் அமைச்சராக செயற்படுவேன், பஸிலோ வேறு நபர்களோ காலை வாரினால் வெளியேறுவேன்.
கோட்டாபயவை பாதுகாக்க முற்படவில்லை. அவர் பதவி விலகியாக வேண்டும். இந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றேன்.
ஜனாதிபதி முன் பதவியேற்கும்போது அருவருப்பாக இருந்தது. அதனால்தான் படம்கூட எடுக்கவில்லை. எனினும், நாட்டுக்காக அதனை செய்தோம். நபர் அல்ல, ‘ஜனாதிபதி’ என்ற பதவிநிலையை மதிக்க வேண்டும்.
நாடு ஸ்தீரமடைந்த பின்னர், ஜனாதிபதி பதவி விலகுவார் என நம்புகின்றேன். ” – என்றார்.
இணைந்திருங்கள்