நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக தற்போது விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இம்மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31 ஆம் திகதி வரை மாத்திரமே விமானங்களுக்கான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேசமயம் சில விமானங்கள் சென்னைக்கு சென்று அங்கு எரிபொருளை பெற்று போக்குவரத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இது குறித்து விமான நிலையம் உத்தியோக பூர்வமாக எவ்வித அறிவித்தலையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்