ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சுமார் 40 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து சுயாதீனமாகி புதிய கட்சியாக செயற்படத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட சில அமைச்சரவை அமைச்சர்களும் இவ்வாறு சுயாதீனமாக செயற்படவுள்ளதுடன், ரொஷான் ரணசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத் தலைமைப் பதவியிலிருந்து ஏற்கனவே இராஜினாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இந்த குழு பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாக செயற்பட்டாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி, அரசாங்கத்தில் இணைந்து கொண்ட டயானா கமகே மற்றும் அரவிந்த குமார் போன்ற சில பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த புதிய கூட்டணியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.