இந்த புதிய அலுவலகத்திற்கு ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட போது, பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாக கடமையாற்றியதாக இலங்கை இராணுவம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தற்போது பதவி வகித்து வரும் இராணுவப் படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவப் பிரதானி பதவியில் இருந்து விலகியதன் பின்னர் ஜூன் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

இந்நிலையில்  கோட்டாபயவின் மிகவும் நம்பிக்கைக்குரியவரான சவேந்திர சில்வாவின் இந்த திடீர் முடிவு தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கை இராணுவ  கட்டமைப்பிலும் சவேந்திர சில்வாவின்  திடீர் இராஜினாமா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் இந்த திடீர் முடிவுக்கு பின்னால் அமெரிக்கா உள்ளதாக தகவல்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இராணுவ தளபதி சவேந்திரசில்வா, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அறிவிக்காது, அமெரிக்க தூதுவரை சந்தித்தது அடிப்படை குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறியமை இரண்டாவது குறற்ச்சாட்டாக சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் அனுராதபுரத்தில் உள்ள ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டலை பாதுகாக்க தவறியமை தொடர்பாகவும் சவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டலுக்கு பாதுகாப்பு வழங்காமை தொடர்பாக பல இராணுவ அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.