புதிய அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதியின் அனைத்து அதிகாரங்களையும் தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள கவசமாக அமைந்துள்ளதாகவும், 21 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் அரச தலைவர் அமைச்சுப் பதவியினை வகிப்பதற்கான அதிகாரங்கள் காணப்படுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அமைய, அரச தலைவருக்கு எந்தவித அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்ற சரத்து கொண்டுவரப்பட வேண்டுமென கொழும்பில் இடம்பெற்ற ஊடகயவியலாளர் சந்திப்பின்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“புதிய அரசியல் அமைப்பு திருத்தத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரங்களை தொடர்ச்சியாக பாதுகாப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆகையினால் நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால் 19 ஆவது அரசியல் அமைப்பு திருத்ததிற்கு அமைவாகவே அரச தலைவர் ஒருவருக்கு எந்தவித அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்ற சரத்து கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.