ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால், அடுத்த ஜனாதிபதி பசில் ராஜபக்ஷவே என நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனவே, மாற்றப்பட வேண்டியது தனிமனிதனை அல்ல, தற்போதுள்ள அமைப்பே மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கண்டியில் இன்று மஹா நாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விஜேதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் எனவும் பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு அதிக பெரும்பான்மை உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரை அவர் வழிநடத்தி வருவதே இதற்கு காரணம் எனவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்தோடு பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவு செய்வோமேயனால் அதிகமாக பெரும்பான்மை வாக்குகள் பசிலுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம், எனவே கோட்டா சென்ற பின் பசில் பதவிக்கு வந்தால் சரியாக இருக்குமா, ஆகவேதான் இந்த அமைப்பை மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கூறுகிறது. மக்களின் கருத்துக்களை அறிந்து நாங்களும் அதனை நீக்க விரும்புகிறோம். அதற்காக மக்கள் கருத்தை அறியும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்குவது பொருத்தமானதல்ல என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கண்டியில் உள்ள மகாநாயக்கர்களை இன்று சந்தித்த போதே தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.