இலங்கையில் நிலவிவரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது.

இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு! மக்களின் போராட்டத்திற்கு வெற்றிதான் | Mahinda Announcement People S Struggle Victory

இதேவேளை, கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலக வளாகத்திலும் அரசாங்கத்திற்கு எதிரான தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான நிலையில் நாளையதினம் (09-07-2022) பல்வேறு அமைப்புக்கள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கவுள்ளனர்.

மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு! மக்களின் போராட்டத்திற்கு வெற்றிதான் | Mahinda Announcement People S Struggle Victory

இந்நிலையில் கொழும்பின் பாதுகாப்பு தீவிரப்படுத்தும் செயற்பாட்டில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) ஜனநாயக மக்களின் போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.

மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு! மக்களின் போராட்டத்திற்கு வெற்றிதான் | Mahinda Announcement People S Struggle Victory

அந்த பதிவில்,

“தண்ணீரின் அழுத்தம் குறையட்டும்! கண்ணீர் வாயு எரிந்து போகட்டும்!! வன்முறை மற்றும் வன்முறை வெற்றி பெறச் செய்வோம்!!!. ஜனநாயக மக்களின் போராட்டத்திற்கு வெற்றி” என பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நாளை இடம்பெறவுள்ள அரச எதிர்ப்பு போராட்டங்களுக்கு பல்வேறு அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களும் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.