இலங்கையில் இதுவரையில் 5 புதிய கோவிட் திரிபுகள் பரவுவதாக தெரியவந்துள்ளது.அதனை அடையாளம் காண நாளைய தினம் விசேட பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தின் பிரதானி பேராசிரியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.இந்த பரிசோதனை நடவடிக்கைக்காக புதிய பரிசோதனை கருவிகள் கொரியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதற்றகமைய புதிய திரிபுகளை கண்டுபிடிக்கும் பரிசோதனை நாளைய தினம் ஆரம்பிக்கப்பட்டு நாளைய தினமே முடிவுகளை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.இலங்கையில் பரவும் கொரோனாவின் புதிய திரிவு தொடர்பில் இந்த ஆய்வார்களின் முடிவிற்கமைய தெளிவான முடிவு பெற்றுக் கொள்வதற்கு முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அதற்கமைய அதன் ஆபத்துக்களை அறிந்து செயற்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.