தொண்டையில் வளர்ந்த சதையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்குப் பின் மூளையில் ரத்தக்கசிவு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு பிரேசிலின் முன்னாள் அழகி உயிரிழந்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலை சேர்ந்த 27 வயதான கிளேய்சி கார்ரியா (படநலஉல உழசசநயை) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் 2018ல் நடந்த அழகி போட்டியில் பிரேசில் அழகி பட்டம் வென்றார்.
அதன் பின் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார். அழகு கலை நிபுணராகவும் 56 ஆயிரம் பேர் பின் தொடரும் ‘இன்ஸ்டாகிராம்’ பிரபலமாகவும் உள்ளார்.
சில மாதங்களுக்கு முன் ‘டான்சில்ஸ்’ எனப்படும் தொண்டையில் வளர்ந்த சதையை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின் சில நாட்களில் அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோமா நிலைக்கு சென்றார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நினைவின்றி இருந்தவர் சமீபத்தில் வைத்தியசாலையில் உயிரிழந்தார். உடற்கூராய்வுக்கு பின் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இணைந்திருங்கள்