பிரித்தானியாவின் நிதி அமைச்சர் மற்றும் சுகாதார செயலாளர் ஆகியோர் பதவி விலகியுள்ள நிலையில், தற்போது அந்த பதவிகளுக்கு புதியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, புதிய நிதி அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, புதிய சுகாதார செயலாளராக ஸ்டீவ் பார்க்லே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் முன்பு டச்சி ஆஃப் லான்காஸ்டரின் அதிபராகவும், டவுனிங் வீதியின் தலைமை அதிகாரியாகவும் இருந்தார்.
இதனிடையே, நாதிம் ஜஹாவி வகித்த கல்வி செயலாளர் பதவிக்கு மிச்செல் டோனெலன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்யாவிற்கான பிரதமரின் வர்த்தக தூதர் தியோ கிளார்க் சற்றுமுன் இராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரித்தானிய அரசாங்கத்தின் உயர் மட்ட அமைச்சர்களாக இருந்த நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார செயலாளர் சஜிட் ஜாவிட் ஆகியோர் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.
கிறிஸ் பிஞ்சர் விவகாரத்தைக் கையாள்வதில் போரிஸ் ஜோன்சன் அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொண்டதால், சஜித் ஜாவித், சுகாதாரச் செயலாளர் பதவியையும், ரிஷி சுனக் நிதி அமைச்சர் பதவியையும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைந்திருங்கள்