கொழும்பு – கொட்டாஞ்சேனையில் உள்ள எரிபொருள் நிலையத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மண்ணெண்ணெய் பெறுவதற்காக குறித்த எரிபொருள் நிலையத்திற்கு அருகே மக்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் மண்ணெண்ணெய் எரிபொருள் நிலையத்திற்கு வருவதாக தெரியவந்ததையடுத்து கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மேலும் பலர் எரிபொருள் நிலையத்தின் முன் ஒன்றுகூடியுள்ளனர்.
இதேவேளை மண்ணெண்ணெய் பெறுவதற்காக காத்திருந்த நபரொருவர் எரிபொருள் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸாரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் அங்கு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பின் பல பகுதிகளை சேர்ந்த குறிப்பாக கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் இதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த எரிபொருள் நிலையத்திலேயே எரிபொருளை பெற்றுக்கொள்ள வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்