கொழும்பில் ஆயுதங்களை காட்டி பெண்களிடம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
பண்டாரகம, அதுலுகம பிரதேசத்தில் தலங்கம பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடிய சந்தேகத்தின் பேரில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 22 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், சுமார் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொரளை, ஹோமாகம, களுத்துறை, மாலபே, பிலியந்தலை, பாணந்துறை, கஹதுடுவ, மத்தேகொட, கடவத்தை மற்றும் கெஸ்பேவ ஆகிய இடங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கூரிய ஆயுதங்களை காட்டி பெண்களை மிரட்டி அவர்களிடம் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் 55, 34, 27 மற்றும் 22 வயதுடைய முல்லேரியா மற்றும் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இணைந்திருங்கள்