தற்போதைய அரசு ஜனநாயக வழியில் விரட்டியடிக்கப்படும். அதற்கான அரசியல் தலைமையத்துவம் எம்மால் வழங்கப்படும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சிறைதண்டனை அனுபவித்துவரும் போராட்டக்காரர்களை – சிறைச்சாலைக்கு நேற்று நேரில் சென்று சந்தித்து, சுகநலம் விசாரித்த எதிர்க்கட்சித் தலைவர், அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.

” வன்முறையை தூண்டிய ராஜபக்சக்கள் வெளியே, ஆனால் நாட்டுக்காக போராடியவர்கள் உள்ளே. இந்த அணுகுமுறையை அனுமதிக்க முடியாது.  இந்த கையாலாக அரசை விரட்டியடிக்க வேண்டும். அதற்கான ஜனநாயக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசை தெரிவு செய்வதற்கான உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.” – எனவும் சஜித்  வலியுறுத்தினார்.