சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை இழந்துள்ள நன்மதிப்பை பெறாமல் எந்த நாட்டிலிருந்தும் எரிபொருளைப் பெற முடியாது என்று பாட்டாலி சம்பிக்க ரணவக்க எம். பி. தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் எரிபொருளை வாங்குவது குறித்து பேச்சு நடத்துவது தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே சம்பிக்க தெரிவித்துள்ளார்.

“சர்வதேச அரங்கில் இலங்கை தனது பிம்பத்தை மீட்டெடுக்கம் வரை உலகில் உங்கிருந்தும் எரிபொருளை பெறமுடியாது. ஊழலால் பெயர் கெட்டுவிட்டது. அமெரிக்காவில் உள்ளி வெளிநாட்டு வங்கியொன்று ஏற்கனவே இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

உண்மையான பல கட்சி அரசாங்கமே இப்போது தேவை. எதிர்க்கட்சிகள் இணைந்து தேசத்தை மீட்டெடுக்க பங்களிக்க வேண்டும். அரசும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைய வேண்டும்” – என்றும் அவர் கூறினார்.