தமது நட்புநாடுகளான இலங்கைக்கும் இந்தியாவுக்கும் குறைந்த விலையில் மசகு எண்ணெயை வழங்குவதற்கு ரஷ்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
அதற்கான பேச்சு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கு மசகு எண்ணெயைவழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய்யை பெற்றுக்கொள்வதற்கு மேற்கத்தைய நாடுகள் விதித்துள்ள தடைகள் இலங்கையை பாதிக்காது என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இடம்பெறாததால் ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெயைப் பெறுவதில் இலங்கைக்கு எந்தவித தடைகளும் இருக்காது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை, இந்திய அரசாங்கமும் ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ள நிலையில், ரஷ்யாவின் நட்பு நாடுகளான இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உலக சந்தையில் விற்பனை செய்யப்படும் விலையை விட குறைந்த விலையில் மசகு எண்ணெயை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஷெல் நிறுவனம் இலங்கையிலிருந்து விலகிக்கொண்டதன் பின்னர், ரஷ்யாவே இலங்கைக்கு எரிபொருள் வழங்கியுள்ளது. அந்த வகையில் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளப்பட்டால் குறைந்த விலையில் எரிபொருளை மக்களுக்கு விநியோகி்க முடியும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இணைந்திருங்கள்