இலங்கையில் கடந்த மே 30 ஆம் திகதி முதல் இன்றுவரை 20 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். மேற்படி சம்பவங்கள் தொடர்பில் இதுவரை நான்கு சந்தேக நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பாதாள குழுக்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், அது சம்பந்தமான வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினமும் இலங்கையில் இருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்