அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்குச் சென்றுகொண்டிருந்த சொகுசுக் கப்பல் ஒன்று பனிப்பாறையின் ஒரு பகுதியில் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Norwegian Sun எனும் அந்தச் சொகுசுக் கப்பலினுடைய முன்பகுதியின் வலப் பக்கம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, கப்பல் மீண்டும் சியேட்டல் நகருக்குப் பயணம் செய்து அங்கேயே பாதிப்புகளைச் சீர்செய்துகொள்ளலாம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
ஆனால் கப்பல் குறைந்த வேகத்தில் செல்லவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும் கப்பலில் இருந்த 2,000 பயணிகளையும் சியேட்டல் நகர் வரை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் CNN குறிப்பிட்டது.
இணைந்திருங்கள்