தற்பொழுது திருகோணமலை முனையத்தில் இருந்து நாடு பூராகவும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், என்றாலும் நாட்டுக்கு தேவையான எரிபொருளில் 15 சதவீதத்தை மாத்திரமே பூர்த்தி செய்ய முடியும் எனவும் IOC எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கோசல விதான ஆராச்சி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினமும் IOC நிறுவனம் முடியுமான அளவு எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடு பூராகவும் 80 எரிபொருள் தாங்கி ஊர்திகளே எரிபொருள் விநியோக செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.