நாட்டிற்கு வரும் விமானங்களை அடுத்த பயணங்களுக்கான எரிபொருளை நிரப்பி வருமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையின் எரிபொருள் இருப்பு தற்போது குறைந்துள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கைக்கு மேலுமொரு நெருக்கடி: முடக்கும் அபாயத்தில் சர்வதேச விமான சேவைகள்! | Sri Lanka Fuel International Airlines Will Stop

இந்நிலையில், இலங்கைக்கு வரும் வெளிநாட்டு விமான பயணங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விமான சேவை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விமானங்கள் திரும்பி செல்வதற்காக எரிபொருள் நிரப்பி வருவதனால் விமானங்களில் ஏற்றப்படும் சரக்குகளின் அளவு குறைவடைகின்றன.

இலங்கைக்கு மேலுமொரு நெருக்கடி: முடக்கும் அபாயத்தில் சர்வதேச விமான சேவைகள்! | Sri Lanka Fuel International Airlines Will Stop

மேலும், இடையில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக வேறு நாடுகளில் விமானங்களை தரையிறக்க வேண்டியுள்ளமையினால் செலவுகள் அதிகரித்துள்ளது.

இதனால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், இந்த விமானங்களின் சரக்கு மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், செலவுகளை அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கைக்கு மேலுமொரு நெருக்கடி: முடக்கும் அபாயத்தில் சர்வதேச விமான சேவைகள்! | Sri Lanka Fuel International Airlines Will Stop

இந்த சூழ்நிலையில் விமான டிக்கெட்டுகளின் விலை மேலும் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது எனவும் விமான சேவைகள் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பெரிய விமானம் அதிக எரிபொருளை சேமித்து வைத்து பறக்கும் என்பதனால் எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற இலங்கைக்கு அடிக்கடி செல்லும் விமானங்கள் எரிபொருளுடன் திரும்பும் என எதிர்பார்க்கலாம்.

இலங்கைக்கு மேலுமொரு நெருக்கடி: முடக்கும் அபாயத்தில் சர்வதேச விமான சேவைகள்! | Sri Lanka Fuel International Airlines Will Stop

இருப்பினும் தற்போது தமது பயணங்களைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக விமான சேவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரையில் இலங்கைக்கு 42 விமான சேவைகள் வருகின்ற நிலையில், நீண்ட தூர பயணங்களின் போது திரும்பி செல்வதற்காக எரிபொருள் நிரப்பி செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இலங்கைக்கு மேலுமொரு நெருக்கடி: முடக்கும் அபாயத்தில் சர்வதேச விமான சேவைகள்! | Sri Lanka Fuel International Airlines Will Stop

சராசரியாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏறக்குறைய 8 மில்லியன் லீட்டர் விமான எரிபொருளை சேமித்து வைக்க முடியும், ஆனால் தற்போதைய வெளிநாட்டு இருப்பு நெருக்கடி காரணமாக விமான எரிபொருள் இருப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எரிபொருள் விநியோகத்தை தனி நிறுவனத்திற்கு மாற்றுவது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.