அமைச்சர் பதவியில் இருந்து தம்மிக்க பெரேராவை (Dhammika perera) உடனடியாக நீக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வலியுறுத்தியுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அமைச்சரவை, மரபுகளைமீறி கடும் விமர்சனங்களை முன்வைத்ததற்காகவே அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக அறிய முடிகின்றது.

இது தொடர்பான தனது நிலைப்பாட்டை பிரதமர், ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு (Gotabaya Rajapaksa) தெரியப்படுத்தியுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு பிரதமர் ரணிலிடம், உரிய திட்டம் இல்லை எனவும், நிதியமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் எனவும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா நேற்றைய தினம் (06-07-2022) அறிவித்தார்.

இந்நிலையிலேயே அவரை அமைச்சு பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.