ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உட்பட 47 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் தீர்மானித்துள்ளனர்.

நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு ஜனாதிபதி கௌரவமான முறையில் பதவி விலகி புதிய ஜனாதிபதியை நியமிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என நேற்று பிற்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் இக்குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.

எவ்வளவோ காத்திருந்தாலும் ஜனாதிபதியின் தலைமையில் நாடு மீளாது எனவும், அதனை கண்டு கொள்ளாததால் நாடு இரத்த ஆறுகளாக மாறி உயிர், உடமை இழப்புக்கள் ஏற்படும் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

எனவே, கோத்தபாய ராஜபக்ச பதவியில் நீடித்தால் இறுதியில் பிரிவினைவாத சக்திகள் வலுவடைந்து நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதியின் இராஜினாமாவின் பின்னர் பாராளுமன்றத்தில் உள்ள அனைவரது இணக்கப்பாட்டுடன் சிரேஷ்ட அரசியல் தலைவர் ஒருவரை ஜனாதிபதி அலுவலகத்திற்கு நியமிக்க வேண்டும் எனவும் கலந்துரையாடியுள்ளனர்.

இக்கலந்துரையாடலில், தற்போதைய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சரித ஹேரத், நாலக கொடஹேவா, சன்ன ஜயசுமன, உபுல் கலப்பட்டி, உதேன கிரிடிகொட, அகில எல்லாவல மற்றும் பலர் கலந்துகொண்டனர்.