இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை தீவிரமடையும் என பிரபல சோதிடர் பரபரப்பு ஆரூடம் வெளியிட்டுள்ளார்.
சிங்கள யூடியுப் தளத்திற்கு தகவல் வெளியிட்ட சோதிடர் கே.ஏ.யு.சரச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.
“ஜுலை 09 ஆம் திகதி மற்றும் அதனைச் சூழவுள்ள நாட்களில் மேலும் தீவிரமடையும். 9ஆம் திகதி உட்பட ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படலாம்.
12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை இழக்க நேரிடும். 12ஆம் திகதி ஏற்படும் கிரக நிலை மாற்றம் நாட்டின் தலைவருக்கு பொருத்தமற்றதாகும். கிரக நிலை இடம்பெயர்வினால் தலைவர் பதவியை இழப்பார்.
அந்த கிரக நிலை மாற்றம் தற்போதைய அரசாங்கத்திற்கும் நன்மையை ஏற்படுத்தாது.
நாட்டிற்கு புதிய தலைவர் வருவார். அதுவும் தற்போது அரசியலில் உள்ள ஒரு தலைவரே நாட்டின் அதிகாரத்தை ஏற்பார். அவர் ஒரு சக்தியுடனேயே அதிகாரத்திற்கு வருவார்.
அத்துடன் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவிலேயே நாட்டிற்கு ஒரு சில நெருக்கடி நிலை தீரும். 9ஆம் திகதிக்கும் 12ஆம் திகதிக்கும் இடையில் ஏற்படும் கிரக மாற்றம் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்