ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விமான நிலையத்தில் இருப்பதாகவும் ராஜபக்ச குடும்பத்தினர் தங்கம் உட்பட பொருட்களுடன் கப்பலில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள குரல் பதிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குரல் பதிவை பாதுகாப்பு படையின் முன்னாள் பிரதானி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
“ மச்சன் மேனக ஜனாதிபதி தற்போது விமான நிலையத்தில் இருக்கின்றார். அந்த இடத்திற்கு செல்லுமாறு முடிந்தளவுக்கு இந்த தகவலை பகிரவும். அங்கிருந்து வெளியேற விட வேண்டாம்.
அத்துடன் பி.யு.சி 623 சமுத்திர என்ற கப்பல் இருக்கின்றது. அந்த கடற்படை கப்பலில் இவர்களின் தங்கம், சொத்துக்களை எடுத்துச் செல்ல உள்ளனர். கடற்படை கப்பலில் ராஜபக்ச குடும்பத்தினரை கடலுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்து வருகின்றனர்.
அங்கிருந்து வேறு கப்பலுக்கு இவர்கள் மாற்றப்படலாம். ஜனாதிபதி விமான நிலையத்தில் இருக்கின்றார். முடிந்தளவு இந்த தகவலை பகிர். இவர்களை வெளியேற மாத்திரம் இடமளித்து விட வேண்டாம். என அந்த குரல் பதிவில் பேசும் நபர் கூறுகிறார்.
எது எப்படி இருந்த போதிலும் இந்த குரல் பதிவில் பேசும் நபர் யார் என்ற விடயங்கள் வெளியாகவில்லை.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்