சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைத்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சு மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதாக அமைச்சர்கள் கூட்டுக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர் பதவியில் இருந்து பந்துல குணவர்தன விலகுவதாக அறிவித்திருந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.