பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நேற்றைய தினம் பெரும் போட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகை போராட்டகாரர்களினால் கைப்பற்றப்பட்டது.
மேலும் ஜனாதிபதி செயலகமும் முற்றுகையிடப்பட்டது. இந்த போராட்டத்தை தொடர்ந்து எதிர்வரும் புதன்கிழமை பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார் என சபாநாயகர் நேற்றிரவு கூறியிருந்தார்.
மேலும் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கசும் அறிவித்திருந்த நிலையில், கொழும்பில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லம் நேற்றிரவு தீவைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் தற்போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, தீவைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் வீடு தனக்கு பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்