கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்த 10 கட்சிகள் கொண்ட குழு நாடாளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக எதிர்க்கட்சியில் இருக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்  விமல் வீரவன்ச தொிவித்துள்ளாா்.

மேலும் அமையப்போகும் அரசாங்கத்தை சீர்குலைக்கும் எண்ணம் இல்லை எனவும் அவா் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.