ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சிங்கப்பூர் ஊடாக சவுதி பயணம் செய்ய உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ சிங்கப்பூர் வழியாக சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத மாலைதீவு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை பல மாதங்களாக இடம்பெற்ற போராட்டங்கள் வலுப் பெற்றதால், மாலைத்தீவுக்கு நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், புதன்கிழமை தனது ராஜினாமாவை சமர்பிப்பதற்கான காலக்கெடுவை தவறவிட்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ சவுதி அரேபிய விமானத்தில் தற்போது சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய தலைமைத்துவத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்கள் மற்றும் வீடுகளை முற்றுகையிட்டு ஆக்கிரமித்துள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளன.
பிரதமர் ரனில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டங்கள் மேலும் வலுப்பெற்று வருவதோடு தற்போது
நிலைமையை தணிக்க பொலிஸ் மற்றும் இராணுவத் தலைவர்கள் அடங்கிய குழுவொன்றை தாம் அமைத்ததாகக் கூறிய ரணில் ஜூலை 20 ஆம் திகதி பாராளுமன்றம் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் என்று மீண்டும் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்