போராட்டகாரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் மேல் தளம் இடிந்து விழும் ஆபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 9ம் திகதி இடம்பெற்ற போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை அரசாங்க எதிர்ப்பு ஆர்பாட்டக்கார்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறிருந்தார். தொடர்ந்தும் ஜனாதிபதி மாளிகை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து விடப்பட்டிருந்த நிலையில் அதிகளவாக பொது மக்கள் வந்து சென்றனர்.

இந்நிலையிலேயே ஜனாதிபதி மாளிகையின் மேல் தளம் இடிந்து விழும் ஆபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேல் நோக்கி செல்லும் மரக்கட்டைகளினால் அமைக்கப்பட்டுள்ள ஒரு பகுதி உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பலகையை போராட்டகாரர்களே காட்டினர்.

எவ்வாறாயினும், இந்த மாளிகையை ஆய்வு செய்த தொல்பொருள் திணைக்களம், பல தொல்பொருட்கள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.