ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் ஜனாதிபதி பதவிக்கு தமது கட்சிகளின் பெயர்களை சமர்ப்பித்துள்ளன.
ஜனாதிபதி பதவிக்கு கட்சிகளால் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பின்னணியில், புதிய ஜனாதிபதியை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டால், தனது கட்சியில் இருந்தும் ஜனாதிபதி பதவிக்கான பெயரை முன்மொழிவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதி பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை அவர் முன்மொழிவார் என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக வெளியான செய்திகள் பொய்யானவை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் எதுவும் பேசாத நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு 60-70 எம்.பி.க்கள் இருக்கிறார்களா என்பது பிரச்சினைக்குரியது எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த தருணத்தில் சர்வஜன வாக்கெடுப்புக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பின் பிரகாரம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது. ஒருமித்த கருத்துக்கு அமைய பிரதமர் பதவிக்கு பெயர் முன்வைக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் இணக்கப்பாட்டின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறும் இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை ஏற்குமாறும் கோரப்பட்டுள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இணைந்திருங்கள்