முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியுள்ள நிலையில், எஞ்சிய இரண்டு வருடத்திற்காக  புதிய ஜனாதிபதி நாளை தெரிவு செய்யப்படவுள்ளார்.இப் பதவிக்காக ரணில் விக்ரமசிங்க உட்பட மூன்று அரசியல் தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான ரணில் விக்ரமசிங்வின் பதவி சவாலுக்கு உட்படத்தப்பட்டு உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.எனினும் ரணிலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லுபடியற்றதாக ஆக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து எந்தவித தடையும் இன்றி நாளையதினம் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் போட்டியாளராக ரணில்  பங்கேற்கவுள்ளார்.இதேவேளை சமகால நிலவரப்படி 140 என்ற பெரும்பான்மை வாக்குகள் மூலம் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படவுள்ளதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரணில் விக்ரமசிங்கவுடன், பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் டலஸ் அழகப்பெருமவும், மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.