தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இணையத்தின் ஊடாக விளம்பரப்படுத்தி பாலியல் தொழிலை முன்னெடுத்து வந்த இடம் கொட்டாவ பகுதியில் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.

கொட்டாவ பகுதியில் வாரச்சந்தைக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பாலியல் தொழிலை முன்னெடுத்து வந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பெண்களும் மற்றும் அங்கிருந்த ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர் என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொட்டாவ காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்கள் 30 தொடக்கம் 37 வயதுக்கு இடைப்பட்ட மத்துகம, பலாங்கொடை, பாதுக்கை, பெலிவுல்ஓயா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர்களை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.