அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால், பலமான முடிவுகளை எடுக்க நேரிடும் என சீனா அச்சுறுத்தியுள்ளது.

நான்சி பெலோசி அடுத்த மாதம் தைவான் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

தைவான் தீவு தனது நாட்டுக்கு சொந்தமான பகுதி என்று சீனா கூறுகிறது.

 லண்டனில் இருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் நாளிதழ், பெலோசி தைவானுக்கு கூடுதலாக இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மற்றொரு தூதுக்குழுவுடன் விஜயம் செய்யவுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், தைவானின் வெளியுறவு அமைச்சகம், அவ்வாறான பயணம் தொடர்பாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளது.