கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து செய்தியறிக்கையிடும் நடவடிக்கைகளில்  ஈடுபட்டுக்கொண்டிருந்த இரு செய்தியாளர்களை காணவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் செய்தியாளர்கள் பலர் தாக்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட இரு பத்திரிகையாளர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என தகவல்கள் வெளியாகின்றன.

கொள்ளுப்பிட்டி கிரஸ்காட் பகுதியில் வைத்து விமானப்படையினரால் கைதுசெய்யப்பட்ட சத்துரங்க பிரதீப் குமார கசுன் குமாரகே இருவரையும் இன்னமும் பொலிஸாரிடம் ஒப்படைக்கவில்லை என செய்திகள் வெளியாகின்றன.

மேலும் செய்தியாளர்கள் பலரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.