குறைபாடுகள் இருந்தபோதிலும் இலங்கை இப்போது சட்டபூர்வமான அரசாங்கத்தால் நடத்தப்படுவதாக
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிர்வாகம் நாட்டிற்கான பொருளாதார திட்டத்தையோ அல்லது மூலோபாய பார்வையையோ முன்வைக்கவில்லை.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக தலையிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அரசாங்கத்தின் திட்டங்களை நாட்டுக்கு முன்வைக்குமாறு பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் அரசாங்கத்தை வற்புறுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய அனைத்து அரசியல் கட்சிகளும் தகுந்த தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அவர்கள் கருதுவதாகவும் தெரிவித்தார்.
இணைந்திருங்கள்