எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை 20% குறைக்கப்படும் என்றும், எரிவாயு விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படுவதால் மூடப்பட்டிருந்த பெரும்பாலான உணவகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

எல்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எரிபொருள் விலை கணிசமாகக் குறைந்தால், உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையை 20% குறைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலையும் குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.