பலத்த மழை காரணமாக ஐந்து மாவட்டங்களில் 1766 குடும்பங்களை சேர்ந்த 7,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று மற்றும் மழையுடனான வானிலையினால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் தலவாக்கலையில் இன்று காலை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நோர்ட்டன் பிரிட்ஜில் இரண்டு வீடுகள் மீது மண்சரிவு ஏற்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான சஞ்சீவ விமலவீர என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மண்சரிவு அபாயம் காரணமாக வீட்டில் இருந்த பொருட்களை அகற்றிக்கொண்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்